Thothiram Pugal Kirththanam Song

Lyrics

தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா! கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா, மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத் எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய் நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய் நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம் கொன்றீரே பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்; நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம் நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்; நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம் சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! - நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்; சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் பதஞ் சாற்றித் தினம் உமைப் போற்றி பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்; சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே,

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6192
Song ID
thothiram-pugal-kirththanam
Views
0
Downloads
0