Thottililae Pirandu Kuvalayattai கொட்டிலிலே பிறந்து குவலயத்தை
கொட்டிலிலே பிறந்து குவலயத்தை
Lyrics
கொட்டிலிலே பிறந்து
குவலயத்தை காக்க வந்த
கோ மகனே தேவனே அருந்தவமே
தாலேலோ... தா லே லோ...
1. வான் தூதர் வாக்குரைத்த-விந்தை
மனு அவதாரா ஏழை எம்மை காக்கவே
இயேசுவே நீர் பிறந்தீர்
வான முதற்தத்துவனே மனித குல
மருத்துவனே தேனமுத ஞானனே தேவனே
தாலேலோ..தாலேலோ..தாலே லோ..
2. மழைக்காணா நிலம் போல
மக்களினம் வாட்டத்தை நீர்
சத்தியத்தால் காக்கவே நித்தியனே
நீர் ஜெனித்தீர் எம் வாசல் இரு கதவை
திறக்க வந்த மணிவிளக்கே இயேசுவே
பாலனே நீர் துயில்வீர்
தாலேலோ..தாலே லோ.. தாலேலோ
Details
- Numeric ID
- 7268
- Song ID
- thottililae-pirandu-kuvalayattai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open