Thuthi Ganam Magimai துதி கனம் மகிமை இயேசுவுக்கே
துதி கனம் மகிமை இயேசுவுக்கே
Lyrics
துதி கனம் மகிமை இயேசுவுக்கே
தூய நாமமதைப் புகழ்ந்தேத்திடுவோம்
1. ஜெயத்துடனே நம்மை நடத்தினாரே
உயர் நன்மைகளால் முடி சூட்டினாரே
நன்றியால் நிறைந்துள்ளம்
பொங்கி வழிந்திடுதே
நாதனைப் புகழ்ந்திடுவோம்
2. மாலை நிழல் அது சாய்வது போல்
மாறி மாய்ந்திடுதே இக வாழ்வதுவே
மங்கிடாதோர் நல் சுதந்திரம் வானுலகில்
வைத்தவர் அழைக்கிறாரே
3. பாரிலெம்மைப் அவர் பிரித்தெடுத்தே
பெரும் ஜாதியாக்கி உபதேசத்தினால்
மரித்தோர்க்குயர் சுவிசேஷம் ஈந்திட
மன்னவன் கண்டனரே
4. நிறுத்திடவே தம்முன் நிர்மலராய்
திருச் சரீரத்தின் வழியாம் மரணத்தினால்
நம்பிக்கையின் சுவிசேஷத்தில் நிலைத்திட
அம்புவிதனில் அழைத்தார்
Details
- Numeric ID
- 5864
- Song ID
- thuthi-ganam-magimai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open