THUTHI THANGIYA PARAMANDALA KEERTHANAI SONG TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

Lyrics

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம், சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன க்ஷேமம்! 1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன், கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன். 2.மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார். 3.திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார். 4.அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன், எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன். 5.சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன், கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன். 6.விண் ணாடரும் மண் ணாடரும் மேவுந் திருப் பாதன், பண்ணோதுவர் கண்ணாம் வளர் பரமண்டல நாதன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1741
Song ID
thuthi-thangiya-paramandala-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open