Thuthi Thuthi En Maname Song துதி துதி என் மனமே துதிகளில் உன்னதரை
துதி துதி என் மனமே துதிகளில் உன்னதரை
Lyrics
துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
அவர் நாள்தோறும் செய்யும்
நன்மைகளை நினைத்து
பாடித் துதி என் மனமே
அன்னையைப் போல அவர்
என்னை அரவணைத்தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
இன்பமாக இளைப்பாறுவேன் – நான்
கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார்
பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார்
சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
பெலனதை தருபவரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1614
- Song ID
- thuthi-thuthi-en-maname
- Views
- 6
- Downloads
- 0