Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும்
தீய மனதை மாற்ற வாரும்
Lyrics
தீய மனதை மாற்ற வாரும்,
தூய ஆவியே, -கன
நேய மேவியே
1.மாய பாசத் தழுந்தி
வாடி மாளுஞ் சாவிதால்,-மிக
மாயும் பாவி நான்
A
2.தீமை செய்ய நாடுதென்றன்
திருக்கு நெஞ்சமே, -மருள்
தீர்க்கும், தஞ்சமே
3.பரத்தை நோக்க மனம்
அற்றேனே, பதடிதான் ஐயா.-ஒரு
பாவி நான் ஐயா
4.புதிய சிந்தை, புதிய ஆசை
புதுப்பித்தாக்கவே, -அதைப்
புகழ்ந்து காக்கவே
5.ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி,
இரந்து கெஞ்சவே, -தினம்
இதயம் அஞ்சவே
6.கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு
கீதம் பாடவே, -அவர்
கிருபை தேடவே
7.தேவ வசனப் பாலின்மீது
தேட்டம் தோன்றவே, -மிகு
தெளிவு வேண்டவே
8.ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊற்றி
ஜெபித்துப் போற்றவே, -மிகச்
சிறப்பாய் ஏற்றவே
Details
- Numeric ID
- 6099
- Song ID
- tiya-manatai-marra-varum-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0