Lyrics
உலகம் அனைத்தையும்
ஆதாயப்படுத்திக்கொண்டு - உன்
ஆத்துமாவை நீ இழந்து போகாதே -2
முடிவுவரை நிலைப்பவனே
இரட்சிக்கப்படுவானே - சீக்கிரமாய் வரும்
இயேசு சேர்த்துக்கொள்வார் உன்னை-2
1. பல பல படிப்பு படித்தாயே - உன்
பண்புகள் மாறவில்லையே - 2
பல பல நாடுகள் பறந்தாயே - நீ
பரலோகம் நாடவில்லையே - 2
2. செல்வங்களை சேர்த்தாயே - உன்
ஆத்துமாவை காக்கவில்லையே
பெயரும் புகழும் சேர்த்தாயே உனக்கு
ஊழிய வாஞ்சை இல்லையே
பெயரும் புகழும் சேர்த்தாயே - நீ
பகிர்ந்து வாழவில்லையே
3. ஆலயங்கள் சென்றாலும் - நீ
ஆயத்தமாய் செல்வதில்லையே
வெளிவேடம் போடாதே - உன்னை
ஆண்டவர் பார்க்கிறார்
Details
- Numeric ID
- 1692
- Song ID
- ulagam-anaiththaiyum-aathaayam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0