Ulagin Meetpare உலகின் மீட்பரே
உலகின் மீட்பரே
Lyrics
உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது
வல்ல செயல்களால் என்னை மகிழ்வத்தீர்
மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடு
காலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன்
நம்பத்தக்க உம்வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன்
காட்டு விலங்கிற்கு நிகரான வலிமை
எனக்குத் தந்தீரே நன்றி ஐயா
புது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர்
சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால் நான் தினம் காண்பேன்
அல்லேலூயா
நீதிமான் நானே பனையைப்போல் வளர்வேன்
கேதுருமரம் போல் பெலன் எனக்குள்ளே
கர்த்தர் இல்லத்தில் நடப்பட்டவன் நான்
அவர் சமூகத்தில் குடியிருந்து வாழ்ந்திடுவேன் வளர்ந்திடுவேன்
இயேசய்யா
கன்மலையான என் கர்த்தர் உத்தமர்
அநீதியில்லை என்று விளங்கப்பண்ணுவேன்
முதிர் வயதிலும் நான் கனிகள் தருவேன்
பசுமையும் செழுமையும் நிறைந்து வாழ்ந்திடுவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 8000
- Song ID
- ulagin-meetpare-lyrics-song-chords-ppt
- Views
- 15
- Downloads
- 2