Lyrics
உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை
பாசக்கரத்தாலே என்னை தூக்கினீரே – 2
நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே – 4
1. பெலவீனன் என்று தள்ளிவிடாமல்
பெலத்தாலே என்னை இடைகாட்டினீரே – 2
உம் பெலன் தந்து என்னை தாங்கினீரே
உம் தூணாய் என்னையும் நிறுத்தினீரே – 2
2. பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உன்னதங்களிலே அமர செய்தீரே – 2
குப்பையில் இருந்து என்னை உயர்த்தினீரே
புழுதியில் இருந்து என்னை தூக்கினீரே – 2
3. அந்தகார இருளில் வாழ்ந்திட்ட என்னை
ஆச்சரியமான ஒளியில் வந்தடைய செய்தீரே – 2
நீர் செய்த புண்ணியங்கள் அறிவிக்கிறேன்
உம் வல்ல செயல்களை தெரிவிக்கிறேன் – 2
4. ஆசாரிய கூட்டமாய் பரிசுத்த ஜாதியாய்
சொந்த ஜனமாய் தெரிந்தெடுத்தீரே – 2
உம் ஸ்தானத்தில் என்னை நிறுத்தினீரே
உம்மோடு கூட என்னை அமர்த்தினீரே – 2
Details
- Numeric ID
- 3244
- Song ID
- ulaiyaana-setrinilae-vaazhndha-ennai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0