Um Anbai Marappeno

உம் அன்பை நான் மறப்பேனோ

Lyrics

என்னை அழைத்தவரே கருவில் பிரித்தெடுத்தீர் உம் அன்பை நான் மறப்பேனோ? ஜீவனுள்ள நாளெல்லாம் உம் கிருபையை பாடியே உமக்காக என்றும் ஜீவிப்பேன்-2-என்னை 1.இரட்சிப்பை அறியாமல் பாவத்தில் வாழ்ந்தேன் பரிசுத்த தேவன் என்னை தேடி வந்தீர் சித்தத்தை அறியாமல் சுயத்தினில் மிதந்தேன் உம் அன்பின் குரல் கேட்டு தத்தம் செய்தேன் இயேசுவின் இரத்தம் என் பாவத்தைக்கழுவ கல்வாரி அன்பென்னை நிரப்பினதே-2-என்னை 2.வாலிப நாட்களில் முன்குறித்தீரே விடுதலை தந்தென்னை அபிஷேகித்தீர் ஆத்தும பாரம் இதயத்தை உடைக்க அழைப்பின் நோக்கத்தை புரிய வைத்தீர் அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீர் காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டீர்-2-என்னை 3.பயனுள்ள பாத்திரமாய் மாற்றிட என்னை உடைத்து உமக்காக உருவாக்கினீர் கண்ணீரின் பாதையில் பெலத்தால் இடைகட்டி மகிழ்வுடன் உம்மை துதிக்க வைத்தீர் தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவர நான் எம்மாத்திரம்?-2-என்னை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2846
Song ID
um-anbai-marappeno-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1