Um Neethiyai Solla JOHNSAM JOYSON உம் நீதியை சொல்ல

JOHNSAM JOYSON உம் நீதியை சொல்ல

Lyrics

உம் நீதியை சொல்ல ஒரு நாவு போதாதே நீர் செய்ததை சொல்ல இந்த ஆயுள் போதாதே-2 இன்று என்னில் காண்பதெல்லாம் உம்மால் தானே வந்தது-2 இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே உம் மகத்துவத்தை சொல்லித் துதிப்பேன்-2-உம் நீதி நீர் வரும் முன்னே நான் இல்லாமல் இருந்தேன் நீர் வந்த பின்னாலே உயிர் பெற்று வாழ்கின்றேன்-2 பூச்சியான என்னை புதிதும் கூர்மையுமாக்கி பயன்படுத்துகிறீர் நீர் மகிமைப் படுகின்றீர்-2 உம் கிருபை பெரிதல்லவோ உம் மகத்துவத்தை சொல்லித் துதிப்பேன்-2-உம் நீதி மேய்ச்சலை காண என் மேய்ப்பரானீரே நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல் என்னை வைத்தீரே-2 மிகுதியான கனிகள் என்னில் வெளிப்படுத்த பண்படுத்துகின்றீர் நீர் பாதுகாக்கின்றீர்-2 உம் கிருபை பெரிதல்லவோ உம் மகத்துவத்தை சொல்லித் துதிப்பேன்-2-உம் நீதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
547
Song ID
um-neethiyai-solla-lyrics-chords-ppt
Views
1
Downloads
1