Um Paatham Naan உம் பாதம் நான் அமர்ந்திருப்பேன்
உம் பாதம் நான் அமர்ந்திருப்பேன்
Lyrics
உம் பாதம் நான் அமர்ந்திருப்பேன்
இதிலும் மேலான தொன்றும் இல்லை
உம் மார்பில் நான் சாய்ந்திருப்பேன்
என் தஞ்சம் நீரே - என் இயேசுவே
போதுமே உம் சமுகமே
போதுமே உம் பிரசன்னமே
குறைவெல்லாம் நீங்கிடுதே
இயேசுவே என் தஞ்சம் நீரே
நான் நினைப்பதும் எதிர்பார்ப்பதும்
விட மேலானதை எனக்கு செய்பவரே
என் தகப்பனே கைவிடா தேவனே
என் நங்கூரமே என் ஜீவனே
என் அக்ரமங்கள் என் பாடுகள்
நீர் ஏற்றுக்கொண்டு பாவமானீர்
என்னை மன்னித்தீர்
நித்திய மீட்பை தந்தீர்
உம் பிள்ளையாகும்
பாக்கியம் பெற்றுக்கொண்டேன் - 2
போதுமே உம் சமுகமே
போதுமே உம் பிரசன்னமே
பலியாகி மீண்டும் உயிர்த்தீரே
உம்மிலே நான் என்றும் சுவாசிப்பேனே
Details
- Numeric ID
- 6383
- Song ID
- um-paatham-naan-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open