Umakkaaga Paaduvaen எந்தன் உதடுகள் உம்மை உயர்த்திட
எந்தன் உதடுகள் உம்மை உயர்த்திட
Lyrics
எந்தன் உதடுகள் உம்மை உயர்த்திட
புதிய கவிதையை எனக்குள் வைத்தீரே
எந்தன் ஆத்துமா உம்மை பாடிட
புதிய பாடலை எனக்கு தந்தீரே
வார்த்தைகள் சொற்றொடர்கள்
மெல்லிசை பிறக்குதே
இயேசு நீர் தந்த வரத்தை
நான் பயன்படுத்துகிறேன் (2)
எந்தன் உள்ளத்தில்
நீர் வைத்த வரிகளை
பாடலாக நான் எழுதி
உமக்காக பாடுவேன்
எனக்கு ஈவாக
நீர் தந்த பாடலை
வேறொருவருக்கும் அல்ல
உமக்காக பாடுவேன்
உந்தன் வார்த்தைகளை நான் பாடலாய் அமைத்து
பலியாக உமக்கு தருகிறேன் இயேசுவே
என்னை அழைத்த நல்ல தேவனே
என் வாழ்நாளெல்லாம் உம்மை மாத்திரம் பாடுவேன்
உம்மை பாடுவதே நான் பெற்ற
நல்ல பாக்கியமே
நீர் தந்த இந்த கிருபைக்காக
உம்மை பாடுவேன் (2)
Details
- Numeric ID
- 6535
- Song ID
- umakkaaga-paaduvaen-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open