Samayamithu Nalla Samayam Song Lyrics சமயமிது நல்லசமயம், உமதாவி
சமயமிது நல்லசமயம், உமதாவி
Lyrics
சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -
ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை,
ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம்,
பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப்
Details
- Numeric ID
- 7456
- Song ID
- umatavi-taravenume-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0