Ummai Naadi Thedum Manithan …

உம்மை நாடித் தேடும் மனிதர்

Lyrics

உம்மை நாடித் தேடும் மனிதர் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே – 2 துதியும் கனமும் தூயோனே உமக்கே 1. ஒரு நாளும் உம்மை மறவேன் ஒரு போதும் உம்மை பிரியேன் – 2 மறு வாழ்வு தந்த நேசர் மணவாளன் மடியில் சாய்ந்தேன் – 2 2. என் பார்வை சிந்தை எல்லாம் நீர் காட்டும் பாதையில் தான் – 2 என் சொல்லும் செயலும் எல்லாம் உம் சித்தம் செய்வதில் தான் – 2 3. உந்தன் வேதம் எனது உணவு நன்றி கீதம் இரவின் கனவு – 2 உந்தன் பாதம் போதும் எனக்கு அதுதானே அணையா விளக்கு – 2 4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால் என்னைத்திருத்த வேண்டும் தேவா – 2 கருத்தோடு உமது வசனம் கற்றுத்தந்து நடத்த வேண்டும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7289
Song ID
ummai-naadi-thedum
Views
0
Downloads
0