Ummai Paada En Siru உம்மை பாட என் சிறு நாவு போதுமோ

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ – 2 பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல் – 2 பல கோடி நன்மைகள் செய்தீரையா இயேசையா இயேசையா பல கோடி நன்மைகள் செய்தீரையா 1. உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர் நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர் – 2 களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர் – 2 உம் சாயலாய் என்னை உருவாக்கினீர் இயேசையா இயேசையா உம் சாயலாய் என்னை உருவாக்கினீர் 2. உம்மை போல பூவில் யாரும் இல்லை உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை – 2 அகிலத்திற்கும் ஆண்டவர் நீர் – 2 என் மனம் கவர்ந்த மன்னவர் நீர் இயேசையா இயேசையா என் மனம் கவர்ந்த மன்னவர் நீர் 3. உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர் கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர் – 2 இது வரைக்கும் நடத்தி வந்தீர் – 2 இயேசையா இயேசையா இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4937
Song ID
ummai-paada-en-siru-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open