Lyrics
உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையே
உங்க வார்த்தைதான்
என் வாழ்வின் சுவாசமே-2
என் கறையான வாழ்வை கழுவி
வெண்பனி போல் உள்ளத்தை மாற்றி
என் குறையை நிறையுள்ளதாக்கி
என் கரத்த பிடித்து என்னை நடத்தினீர்
மேல் உயர உயர என்னை உயர்த்தினீர்
நீர் போதும் இயேசுவே
நீர் வேண்டும் இயேசுவே
என் பாச நேசமே
என் ஜீவ சுவாசமே-2
1.உம் நேசத்தால் என் உள்ளம் வழியுதே
உலக யோசனை என்னை விட்டு விலகுதே
விசுவாசத்தால் நீதிமானாகிறேன்
உம் கிருபையால் மறுரூபமாகிறேன்-என் கறையான
2.உம் கரங்களே எனைப்பற்றி நடத்துமே
உம் வரங்களே எனை நிரப்பி எழுப்புமே
உம் வார்த்தையே இவ்வுலகை ஜெயிக்குமே
என் ஜீவனே உமக்கென்றே வாழுமே-என் கறையான
Details
- Numeric ID
- 7955
- Song ID
- ummodu-thaan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open