Un Kariyathai Vaikapannum Karthar …

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

Lyrics

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) 1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் – (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் 2. உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் – (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம் 3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம் 4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3233
Song ID
un-kariyathai-vaikapannum-karthar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1