UNAKU NIGAR YAAR SONG LYRICS PTT உனக்கு நிகரானவர் யார்? இந்த
இந்த
Lyrics
உனக்கு நிகரானவர் யார்?-இந்த
உலக முழுவதிலுமே.
தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனார்
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த.
தாய் மகளுக்காகச் சாவாளோ-கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி.
கந்தை உரிந்தெறிந்தனை-நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்து வைத்தனை, கடும்வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே, கனக ரத்ன மேருவே,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே, சுவாமி.
Details
- Numeric ID
- 7338
- Song ID
- unaku-nigar-yaar-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0