Unakukothasai Song உனக்கொத்தாசை வரும்
உனக்கொத்தாசை வரும்
Lyrics
உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் இதோ
தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே
வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ
காலைத் தள்ளாடவொட்டார் கரத்தைத் தளரவொட்டார் மாலை உறங்கமாட்டார் மறதியாய்ப் போக மாட்டார்
கர்த்தருனைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம் நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம்
பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும் இகல் தருவதுமில்லை இன்னல் செய்வதுமில்லை
தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல் தாங்குவார் தூதர் கோடி தாளிடறாதபடி
போக்கும் ஆசீர்வாதமாம் வரத்தும் ஆசீர்வாதமாம் காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே
துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்
இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே
Details
- Numeric ID
- 7467
- Song ID
- unakukothasai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0