Unnathamanavarin Uyar Maraivil Irukkiravan உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன்

உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் -2 நான் கர்த்தரை நோக்கி நீர் என் அடைக்கலம் என்பேன் என் தேவன் என் கோட்டை என் மீட்பர் என் ராஜா நான் நம்பியிருக்கும் தேவன் என்று சொல்லுவேன் 1. வேடன் விரிக்கும் வலைக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவித்து காத்துக்கொள்வாரே -2 சிறகுகளால் என்னை மூடிடுவார் அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவேன் அவர் சத்தியமே எனக்கு பரிசையாகும் காக்கும் கேடகமும் ஆகுமே 2. வாஞ்சை அவரின் மேலே அறிந்தேனே அவரின் நாமம் உயர் அடைக்கலத்தில் வைத்திடுவாரே கூப்பிடுவேன் நல்ல பதில் தருவார் ஆபத்திலே என்னோடிருப்பார் தப்புவித்து என்னை கனப்படுத்தி நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார் 3. இரவின் பயங்கரமும் பகலில் பறக்கும் அம்பும் என்னை ஒன்றும் செய்திடாதே வாதை எந்தன் வீட்டை அணுகாது பொல்லாப்பு எனக்கு நேரிடாது பாதம் கல்லில் இடறாதபடி தூதர் கைகளில் ஏந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6780
Song ID
unnathamanavarin-uyar-maraivil-irukkiravan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open