Unnathar Yesu Uyirthelunthar உன்னதர் இயேசு உயிர்த்தெழுந்தார்
உன்னதர் இயேசு உயிர்த்தெழுந்தார்
Lyrics
உன்னதர் இயேசு உயிர்த்தெழுந்தார்
மரணத்தை வென்று ஜெயித்தெழுந்தார்
அல்லேலூயா பாடி மகிழ்ந்திடுவோம்
இயேசு உயிர்த்தார் அகமகிழ்வோம்
1. மனிதனை மீட்க உயிர்த்தார் இயேசு
தேவ மகிமையோடு எழுந்தார் இயேசு
பயந்த சீடர்கள் நடுவே நின்றாரே
பயங்களை நீக்கி சமாதானம் என்றாரே
2.சாவை இயேசு வென்று விட்டாரே
சாத்தானை இயேசு தோற்கடித்தாரே
பரலோக கதவை திறந்துவிட்டாரே
பரிசுத்தாவி வரங்களை தந்தாரே
3. உயிர்த்த இயேசு பரலோகம் சென்றாரே
மகிமையோடு திரும்பவும் வருவாரே
உலகம் எங்கும் நற்செய்தி
சொல்லுவோம்-இயேசுவின் நாமத்தில்
உலகை வெல்லுவோம்
Details
- Numeric ID
- 6794
- Song ID
- unnathar-yesu-uyirthelunthar-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open