Unnatharae Uyirthezhunthavarae உன்னதரே உயிர்த்தெழுந்தவரே
உன்னதரே உயிர்த்தெழுந்தவரே
Lyrics
உன்னதரே உயிர்த்தெழுந்தவரே
உன்னத அன்பினால் நிறைத்திடுமே (2)
1. கல்வாரி அன்பினால் என்னை
சிலுவையின் அடிமை ஆக்கினீரே (2)
ஜீவிய காலமெல்லாம்
நீர் காட்டும் பாதையில் செல்வேன் (2)
2. கல்வாரி இரத்தத்தால் எந்தன்
சாபங்கள் யாவும் நீக்கினீரே (2)
நல் மனசாட்சியுடன்
நீர் சென்ற பாதையில் செல்வேன் (2)
3. கல்வாரி மகிமையால் என்னை
உன்னதங்களிலே உயர்த்தினீரே (2)
உந்தனின் நாமமதை
தினம் உயர்த்தியே மகிழ்ந்திடுவேன் (2)
Details
- Numeric ID
- 6514
- Song ID
- unnatharae-uyirthezhunthavarae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open