Unthan Aaviyai Song Lyrics உந்தன் ஆவியே, சுவாமி
உந்தன் ஆவியே, சுவாமி
Lyrics
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே, அருள் தந்து காவுமே.
முந்துமானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே.
மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே,
அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே;
சத்ய ஆவியைச் சீடர்க் கித்தரை விட,
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே.
பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே,
தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாச மாகவே அருள், நேச தேவனே.
Details
- Numeric ID
- 7339
- Song ID
- unthan-aaviyae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0