Unthan Vaetham En Manamakilchchi …

உந்தன் வேதம் என் மனமகிழ்ச்சி
Unknown
Lyrics

Lyrics

உந்தன் வேதம் என் மனமகிழ்ச்சியாய் இல்லாதிருந்தால் என் துக்கத்தில் நான் அமிழ்ந்து போயிருப்பேன் -2 எங்கள் தேவனே உந்தன் ஆவியினால் வேதம் தந்தீரே ஸ்தோத்திரம் எங்கள் தாய்மொழியில் நாங்கள் தியானிக்கவே தமிழில் வந்ததினால் ஸ்தோத்திரம் -2 1. நீர் என்னை நம்பப் பண்ணின வசனத்தை எனக்காக நினைத்தருளும் -2 அதுவே எந்தன் சிறுமையில் எனக்கு ஆறுதல் இயேசையா - உந்தன் வார்த்தை என்னை என்றும் உயிர்பிக்கும் ஐயா -2 2. வாலிபன் தன் வழியை எதனாலே சுத்தம் பண்ணுவான் . உந்தன் வார்த்தையின்படியே தன்னை காத்துக்கொள்வதினால் உந்தன் கிருபை சத்தியத்தை சார்ந்து கொள்வதினால் 3. படித்தவரும் சுமப்பார் படிக்காதவரும் சுமப்பார்: உந்தன் பேதைகளை ஞானிகளாக்கிடுமே உந்தன் வேதம் சுமப்பவரை உந்தன் வார்த்தைகள் சுமந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2147
Song ID
unthan-vaetham-en-manamakilchchi-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0