Lyrics
ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன் – 2
1. என்னை நீர் இழுத்துக்கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவோம் – 2
உம் பாதம் சரணடைந்தே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் – 2
2. என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும் – 2
என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே – 2
3. பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாக தந்திடுவேன் – 2
பரிசுத்தர் பரிசுத்தரே-உம்
பரிசுத்தம் தாருமய்யா – 2
Details
- Numeric ID
- 3206
- Song ID
- utrunda-parimala-thailamaam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0