Uyar Malaiyo Sama எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க
Lyrics
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
ஏற்றமாய் தோன்றும்
பாதைகளிலெல்லாம்
பின்னிலே தாங்கிடும்
உள்ளங்கை அழகு
சருக்கலாய் தோன்றும்
பாதைகளிலெல்லாம்
பின்னலாய் தாங்கிடும்
உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும்
என்னை விட்டு போகாமல்
நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு - உயர் மலையோ
உலகத்தின் கண்ணில்
பெரும்பான்மை என்றால்
அதிகம்பேர் நிற்பதே
அவர் சொல்லும் கணக்கு
அப்பா உம் கண்ணில்
தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால்
பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 496
- Song ID
- uyar-malaiyo-lyrics-john-jebaraj
- Views
- 19
- Downloads
- 2