Lyrics
உயர்பரனில் உதித்ததெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ
உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே
ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே
மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே
தற்பரனார் தருஞ்சாட்சி தஞ்சுதனைக் குறிக்குமன்றோ
பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே
நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது
நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி
திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்
கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன்
நீடூழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும்
பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா
Details
- Numeric ID
- 7460
- Song ID
- uyarbaranil-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0