Uyirin Uyirae Neer Thane உயிரின் உயிரும் நீர் தானே
உயிரின் உயிரும் நீர் தானே
Lyrics
உயிரின் உயிரும் நீர் தானே
கருவில் சுமக்கும் தாய் தானே
அகிலம் எங்குமே காணேன்
என் இயேசு போலவே
உம்மைப் பாடி பாடியே
தொடர்வேன் வாழ்வின் மீதியே
மரணம் பிரிக்கும் நேரமே
பறந்தே சமுகம் சேர்வேனே
அதுவரையில் ஆராதிப்பேன் (3)
ஒவ்வொரு நொடியும் உம்மையே
1. கடல் அலை போல் துன்பம் வரினும்
கலக்கம் கொள்ளேனே-கரை சேர்க்கும்
கர்த்தர் உண்டு கலங்கி நில்லேனே
கொடுங்காற்றும் கோர அலையும்
அமரும் சொல்லாலே
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே
2. உம் சிலுவை சுமந்து செல்லும்
பாக்கியம் தந்தீரே - உம் வார்த்தை
வாழ்ந்து காட்டும் கிருபை தாருமே
என் வாழ்வில் இறுதி வரை
உமக்காய் வாழ்வேனே-என் ஜீவன்
பிரியும் வரை உம் பின்னால் தொடர்வேனே
Details
- Numeric ID
- 6746
- Song ID
- uyirin-uyirae-neer-thane-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open