Uyirulla Thirupaliyai Udalai …

உயிருள்ள திருப்பலியாய்

Lyrics

உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் – 2 தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் 1. உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2 என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2 2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தவனவாய் இருப்பதாக – 2 நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக – 2 3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2 உன்னதர் பணி செய்ய வேண்டும் என் உயிர் இருக்கும்வரை – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6035
Song ID
uyirulla-thiruppalai
Views
0
Downloads
0