Vaa Paavi Illaippaara Vaa Song பாமாலை: 284 வா பாவி இளைப்பாற வா

வா பாவி இளைப்பாற வா

Lyrics

1. வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி, என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி, இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன், என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா, பாவி, இருள் நீங்க வா; நான் லோக ஜோதியே, உன் நெஞ்சில் ஒளி வீசுவேன், என்றார் என் நேசரே; மெய்ஞான அருணோதயம் அவ்வாறு நான் கண்டேன் அஜ்ஜோதியில் சந்தோஷமாய் நான் என்றும் ஜீவிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4920
Song ID
vaa-paavi-illaippaara-vaa-song-chords-ppt
Views
1
Downloads
1