Vaa Paavi Malaithu வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா
Unknown
Lyrics

Lyrics

வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா சரணங்கள் என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே ; உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே , உள்ளபடி வாவேன் – வா உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் , உன் பாவத்தைச் சுமந்தேன் ; சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் , ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா விலக யாதொரு கதியில்லாதவன் உலகை நம்பலாமோ ? சிலுவை பாவிகளடைக்கலமல்லோ சீக்கிரம் ஓடி வாவேன் .- வா என்னிடத்தில் வரும் பாவி யெவரையும் இகழந்து தள்ளேனே ; மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே , வாராயோ ,பாவி ? – வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
798
Song ID
vaa-paavi-malaithu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0