Vaana Paraparanae வானபராபரனே! இப்போ வாரும்

வானபராபரனே! இப்போ வாரும்
Unknown
PPT
Lyrics

Lyrics

வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா — பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க — வான கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே –வான தாய் என்னை மறந்தாலும், ஐயா! நீர் மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே யேகோவாவே, எங்களின் இராஜா எழுந்து வாருமையா— வான நினைத்திரா தினமதினில், எம் கர்த்தரே வருவீரே ஆவி, ஆத்துமா, மாமிசம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே மாசில்லா பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே — வான வாதை பிணிதீர எம் வாய்த்த மருந்தே நீர்; பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு இரத்தமே கல்வாரியண்டை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே — வான ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே, அன்பின் தயாளன், ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய் — வான

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6324
Song ID
vaana-paraparanae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open