Vaanil Kaagalam Muzhangidave வானில் காகளம் முழங்கிடவே

வானில் காகளம் முழங்கிடவே
Unknown
Lyrics

Lyrics

வானில் காகளம் முழங்கிடவே வாஞ்சையோடு பறந்திடுவோம் இப்புவி துன்பங்கள் மறைந்திடுதே இயேசுவின் இராஜ்ஜியம் நெருங்கிடுதே ஆ ஆமென் அல்லேலூயா! ஆமென் வாரும் இயேசுவே! (2) கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்க் கறைகள் திரைகள் அகற்றிடுவோம் கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே அவர் வரும் வேளைக்காய் காத்திடுவோம் ஆ ஆமென் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த மகிபன் உரைத்த வாக்கின்படி மாசற்ற மணவாட்டி சபையதனை மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் ஆ ஆமென் பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர் பாடுகள் பாதையில் ஏற்றதினால் தியாகத்தின் மேன்மையை காத்துக் கொண்டோர் அவர் போல் மாறியே பறந்திடுவார் ஆ ஆமென் மகிமையின் நாளும் நெருங்கிடுதே மணவாளன் சத்தமும் கேட்டிடுதே மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் ஆ ஆமென்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3840
Song ID
vaanil-kaagalam-muzhangidave-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0