Vaaniley Or Velli வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட

Lyrics

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட வான தூதர் கூடி பாடி மகிழ்ந்திட காணத்திலே ஆயர் காட்சி கண்டிட இயேசு பாலன் பிறந்திட்டார் உன்னதத்தில் மகிமை மண்ணிலே சமாதானம் மாந்தர்மேல் பிரியமாம் என்று தூதர் பாடினர் ஆர்வமுள்ள ஞானியரும் நாடு நகரம் பயணம் செய்து பெத்தலையில் வந்து சேர்ந்தனர் பொன் போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி படைத்தனர் சின்ன இயேசு பாலகனின் பாதம் விழுந்து பணிந்தனர் நமக்கு ஒரு பாலகனாம் நமக்கு ஒரு குமாரனாம் கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் அவர் நாமம் அதிசயமாம் ஆலோசனைக் கர்த்தாவாம் வல்லமையுள்ள தேவனாம் சமாதான பிரபுவாம் யுத்தங்களின் சத்தம் ஓய சத்துருவின் ஆட்சி சாய இத்தரையில் வந்து பிறந்தார் எத்திசையும் நீதி ஓங்க சத்தியத்தின் தெய்வம் அவர் நித்திய வாழ்வளிக்க வந்து பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2513
Song ID
vaaniley-or-velli-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open