Lyrics
வார்த்தையாம் மீட்பர் மாம்சமானார்
மாம்சமான எம்மை தம்மில் சேர்க்க
மனுஷகுமாரனாய் புவியில் வந்தார்
மணவாட்டியை தம்மில் ஒன்றாக்கினார்
இக்கட்டுக்கெல்லாம் தப்பியே நாம்
அக்கரை தேசம் சேர்ந்திடுவோம்
பலமுள்ள தூதனாய் இறங்கி வந்தார்
திறந்த ஏழு முத்திரை நூலைக் கையிலேந்தி
அக்கினி கண்கள் இடிமுழக்க சத்தம்
வானவில் மேகம் சூழ்ந்திட இறங்கி வந்தார்
ஏழாம் தூதன் எக்காளம் முழங்க
தேவ இரகசியம் வெளிப்பட்டதே
மீட்படைந்த தம் மணவாட்டியை
தம் சொந்தமாக்கிக் கொண்டாரே
மனுஷகுமாரனின் நாட்களிலொன்றை
சீஷர்கள் காண வாஞ்சித்தனரே
அந்நாளைக் காண தேவன் நமக்கு
இந்நாட்களில் மா கிருபை செய்தார் -
தீங்கு நாட்கள் உலகில் வருமுன்னரே
பாங்காகக் காத்தார் தம் ஜனத்தை எடுக்க
கிருபையாய் நமக்கு வெளிப்பட்டாரே
ஆகாயத்தில் நாம் பறந்து செல்ல -
மரணபயம் இனி எனக்கில்லையே
அழிவில்லா வார்த்தை வெளிப்பட்டதால்
மகிமையின் சரீரம் என் சுதந்திரம்
யூபிலி எக்காளம் தொனித்ததால்
வல்லூறும் அறியா பாதை அது
சிங்கங்கள் செல்லா இடமது
சுடரொளி பட்டயம் கடந்து நாம்
ஜீவ விருட்சம் அடைந்தோம்
Details
- Numeric ID
- 7817
- Song ID
- vaarthaiyam-meetpar-maamsamanar
- Slug
- vaarthaiyam-meetpar-maamsamanar
- Views
- 5
- Downloads
- 2