Vaasalgalae Ungal Thaligalai Nal வாசல்களே உங்கள் தலைகளை
வாசல்களே உங்கள் தலைகளை
Lyrics
வாசல்களே உங்கள் தலைகளை
நல் வாஞ்சையுடனே உயர்த்திடுங்கள்
அநாதி கதவுகளே உயர
அநாதி தேவன் உட்பிரவேசிப்பார்
1. சேனைகளின் கர்த்தர் இவர் தானே
சேனாதிபதியாய் வந்தாளுவார்
யுத்தத்தில் வல்லவர் மாறா மகிபனே
யூதாவின் ராஜா உட்பிரவேசிப்பார்
2. உலகமும் அதன் குடிகளும்
உண்டாக்கின கர்த்தர் சொந்தமதே
கடல்கள் மேல் அதை ஸ்தாபித்து ஆளம்
நம் கர்த்தாதி கர்த்தர் உட்பிரவேசிப்பார்
3. கர்த்தருடைய பர்வதத்திலே
பக்தன் பரிசுத்தன் யார் ஏறுவான்
பூரண வடிவு சீயோனிலே வாழும்
பூரண தேவன் உட்பிரவேசிப்பார்
4. உள்ளமத்திலே மாசில்லாதவன்
உண்மை பரிசுத்த கைகளுடன்
மாயை கபடுள்ள ஆணை அகற்றியே
மா தேவனோடு உட்பிரவேசிப்பான்
5.கர்த்தர் சமுகத்தை நாடுகின்ற
பக்தனாம் யாக்கோபு சந்ததியே
தேடி விசாரித்து தேவநீதி பெற்று
தேவாசீரோடயே உட்பிரவேசிப்பான்
6. தடை அகற்றும் தளகர்த்தரே
தீவிரமாக நம் முன் செல்கின்றார்
வாசல் வழியே தம் பின் சென்று எகியே
வீரமுடனே உட்பிரவேசிப்போம்
Details
- Numeric ID
- 4320
- Song ID
- vaasalgalae-ungal-thaligalai-nal-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open