Vaathaiyutta Meetparae Song பாமாலை: 114 வாதையுற்ற மீட்பரே

வாதையுற்ற மீட்பரே

Lyrics

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே, என் இக்கட்டனைத்திலும், சாகும் தருணத்திலும் என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3074
Song ID
vaathaiyutta-meetparae-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open