Vaazhga Vaazhga Bharatha Desam வாழ்க வாழ்க பாரத தேசம்

வாழ்க வாழ்க பாரத தேசம்
Unknown
Lyrics

Lyrics

வாழ்க வாழ்க பாரத தேசம் வாழ்க வாழ்க பாரத தேசம் – (2) 1. கட்சி கொடிகள் பல பல வகையாம் தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2) பாரத தேசம் சுதந்தர தேசம் எத்தனை சலுகை! எத்தனை உரிமை! வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 2. நாவின் மொழிகள் பல பல உண்டு உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2) அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம் அனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2) ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம் விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம் வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர் நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2) அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம் வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம் வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2) கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம் வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம் மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2) சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம் அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம் வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2) அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3868
Song ID
vaazhga-vaazhga-bharatha-desam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0