VAIYAGAM THANNAI KEERTHANAI SONG TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

Lyrics

வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க! பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க, பொற்பதிதனிற் பரன் சேயரைச் சேர்க்க. வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே, மாகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே; பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே, பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க, முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க, ஆக்கணமுயிருள்ளோர் மறு உருத்தரிக்க, ஆண்டவர் வருகிறார், பக்தர்கள் களிக்க. யாவரின் சிந்தை செய்கையும் வெளிப்படற்-கு இரண்டு புத்தகங்களுந் திறந்தவரவர்க்குப் பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப் புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு. அடைக்கலன் யேசுவை அறிந்தவர் நாமம், அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்; படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம் பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6380
Song ID
vaiyagam-thannai-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0