Vali Unndu Orae Oru Vali Unndu வழி உண்டு ஒரே ஒரு வழி உண்டு

வழி உண்டு ஒரே ஒரு வழி உண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

வழியுண்டு ஒரே ஒரு வழியுண்டு சத்யமாம் ஜீவனாம் மீட்பராம் இயேசு என்ற நண்பருண்டு நேசருண்டு, உனக்கொரு நேசருண்டு கண்மணி போலவே காக்கவும், மீட்கவும் இயேசு உண்டு - 2 பாவம் போக்க வந்த நாமம் சாபம் நீங்க செய்த நாமம் நோயை நீக்கும் நல்ல நாமம் பேயை விரட்ட வல்ல நாமம் விண்ணோரும் மண்ணோரும் எந்நாளும் துதி பாடும் உன்னத நாமம், உன்னத நாமம் வெற்றி தர வல்ல நாமம் வாழச் செய்ய வந்த நாமம் செல்வம் தரும் நல்ல நாமம் அற்புதங்கள் நல்கும் நாமம் வானோர் பூதலத்தோர் கீழானோர் கால் முடங்கும் அதிசய நாமம், அதிசய நாமம் பாடு அல்லேலூயா, போடு தாளமய்யா ஆடு நடனமய்யா, ஆவியில் நிறைந்து ஐயா பாடு அல்லேலூயா, போடு தாளமய்யா ஆடு நடனமய்யா, போகும் துன்பமய்யா - வழியுண்டு மீட்புதர வந்த நாமம் சாவை வென்ற வல்ல நாமம் நீதிமானாய் மாற்றும் நாமம் பரிசுத்தமாக்கும் நாமம் விண்ணோரும் மண்ணோரும் எந்நாளும் துதி பாடும் உன்னத நாமம், உன்னத நாமம் வரங்கள் அருளும் வல்ல நாமம் ஜெபம் செய்ய நல்ல நாமம் துதிகள் பாட ஏற்ற நாமம் எல்லாம் செய்ய வல்ல நாமம் வானோர் பூதலத்தோர் கீழானோர் கால் முடங்கும் அதிசய நாமம், அதிசய நாமம் பாடு அல்லேலூயா, போடு தாளமய்யா ஆடு நடனமய்யா, ஆவியில் நிறைந்து ஐயா பாடு அல்லேலூயா, போடு தாளமய்யா ஆடு நடனமய்யா, போகும் துன்பமய்யா - வழியுண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6410
Song ID
vali-unndu-orae-oru-vali-unndu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open