Valla Yesu Kiristhu Naatha Song பாமாலை: 310 வல்ல இயேசு கிறிஸ்து நாதா

வல்ல இயேசு கிறிஸ்து நாதா

Lyrics

1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா, நல்ல நேசமீட்பர் நீர்; பற்று, பாசம், கட்டு முற்றும் அற்றுப்போகப்பண்ணுவீர். 2.அருள் ஜோதி தோன்றிடாமல், இருள் மூடிக் கிடந்தோம்; திக்கில்லாமல் பாவப் பற்றில் சிக்கிக்கொண்டே இருந்தோம். 3. பக்தி ஒன்றுமில்லை, பாரும், சக்தியற்றுப் போயினோம்; ஜீவ பாதை சென்றிடாமல் பாவ பாதை நடந்தோம். 4. இயேசு நாதரே, இப்போது நேசமாக நிற்கிறீர்; என்னை நம்பு, பாவம் நீக்கி உன்னைக் காப்பேன் என்கிறீர். 5. நம்பி வந்து, பாவ நாசா, உந்தன் பாதம் அண்டினோம்; தூய ரத்தம் பாயக் கண்டு, தீய செய்கை வெறுத்தோம். 6.பாவச் சேற்றிலே விழாமல் தேவரீரே காத்திடும்; வல்ல ஆவியாலே என்றும் வெல்லச்செய்து ரட்சியும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4921
Song ID
valla-yesu-kiristhu-naatha-song-chords-ppt
Views
1
Downloads
1