Vaazhlnaalelaam Kalikurnthu …

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

Lyrics

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும் 2. உலகமும் பூமியும் தோன்று முன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே – 2 3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக என்னை மகிழச் செய்யும்-2 4. அற்புத செயல்கள் காணச் செய்யும் மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் – 2 5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும் செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் – 2 6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் – 2 7. ஆயுள் நாட்கள் எழுபது தான் வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் – 2 8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில் கடந்து போன ஓர் நாள் போல – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6421
Song ID
valnalellam-kalikurnthu
Views
0
Downloads
0