Vanangale Boologam வானங்களே பூலோகமே

வானங்களே பூலோகமே
Unknown
PPT
Lyrics

Lyrics

வானங்களே பூலோகமே செவிகொடுங்கள் கர்த்தர் பேசுகிறார் மழையானது இளம்பயிர்மேலே பொழிவதுபோல் என் உபதேசம் பனித்துளிகள் புல்லின்மேலே இறங்குமாப்போல எந்தன் வசனம் இறங்கிடுதே செவிக்கொடுங்கள் 1. பூர்வநாட்களை நினைத்திடு தலைமுறை தலைமுறையாய் சென்ற வருஷங்களை கவனித்துப்பார் உன் தகப்பனைக் கேள் அவரே உனக்கு சொல்லிடுவார் உன் மூப்பரைக் கேள் அவர்கள் உனக்கு சொல்லிடுவார் 2. பூமியின் உயர்ந்த இடங்களின் மேல் ஏறி நடந்திடச் செய்தார் வயலின் பலனை புசிக்கக் கொடுத்தாரே கன்மலையின் தேனால் திருப்தி செய்தாரே கற்பாறையில் வடிந்த எண்ணெயையும் உண்ணக் கொடுத்தாரே 3. உன்னை ஜெநிப்பித்த கன்மலையை மறந்து போனது ஏனோ உன்னை பெற்ற தேவனை மறந்தாயே உன் சிருஷ்டிகரோ தாயின் உள்ளம் கொண்டவரே உன்னை வாழவைக்க தனது உயிரைக் கொடுத்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6692
Song ID
vanangale-boologam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open