Vanthalum Yesuve Vaarumithil வந்தாளும் யேசுவே வாருமிதில்

வந்தாளும் யேசுவே வாருமிதில்
Unknown
Lyrics

Lyrics

வந்தாளும் யேசுவே வாருமிதில் – தேவ மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில் 1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா 2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே நற்குணம் அவர்க்கு நல்கிடும் – தேவா 3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்திட – தேவா 4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம் பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா இந்நேரம் வாருமே – தேவா 5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர் ஆதலாலனந்த ஸ்தோத்திரம் – தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3909
Song ID
vanthalum-yesuve-vaarumithil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0