Lyrics
வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய்
பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே
எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே
வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே உள்ளத்திலே
வார்த்தையானவர்
தேவனானவர்
மாம்சமானவர்
எங்கள் ஆவியானவர்
ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே
வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே
படைத்தவரே என்னை தேடி வந்தீர்
பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே
வந்தாரே நமக்காக
பிறந்தாரே நமக்காக
பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை
எனக்காக அவரே வெளிப்பட்டாரே
சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே
சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே
வந்தாரே எனக்காக
பிறந்தாரே எனக்காக
பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே
சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே
உன்னதத்தில் உம்மோடு உறவாட
உறவு இல்லா என்னிலே உறவானீர்
வந்தாரே உறவாக
பிறந்தாரே உறவாக
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7844
- Song ID
- vantharey-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0