Lyrics
வரவேணும் எனதரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே
அருணோ தயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
1.வேதா கருணா கரா மெய்யான பரா பரா
ஆதார நிராதரா அன்பான சகோ தரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா உன் தாபரம் நல்குவாயே
2.படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா
முடியா தருள் போசனா முதன் மா மறைவாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
3.வானோர் தொழும் நாதனே மறையாகம போதனே
கானாவின் அதீதனே கலிலேய வினோதனே
ஞானாகரமே நடு நிலை யோவா
நண்பா உன்னத நன்மையின் மகா தேவா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1080
- Song ID
- varavenum-ena-tharase
- Views
- 6
- Downloads
- 0