Varugai Kaana Vizhigal Yeanguthaey வருகை காண விழிகள் இரண்டும்

வருகை காண விழிகள் இரண்டும்
Unknown
Lyrics

Lyrics

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2 எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன் பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன் பூமி அதிர்வுகள் உணர்கிறேன் வாதை நோய்களை காண்கிறேன்-2 அன்பு தனிவதை காண்கிறேன் விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 2. தற்பிரியரையும் காண்கிறேன் பணபிரியரையும் காண்கிறேன் அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன் அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்-2 கட்டளை மீறல் பார்க்கிறேன் வேதம் நிறைவேறல் பார்க்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3903
Song ID
varugai-kaana-vizhigal-yeanguthaey-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0