Lyrics
வருவார் விழித்திருங்கள்;-இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்.
பெரியவர், சிறியவர், பேதையர், மேதையர்
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட.
பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க,
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க,
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திலங்க.
வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க,
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க,
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க,
ஞான கானம் பாட நல்லோர் சபை தொடங்க.
விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்,
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்,
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்,
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர்
Details
- Numeric ID
- 6379
- Song ID
- varuvaar-vilithirungal-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0