Vazhvalikum Ejamaanane Ummai வாழ்வளித்த எஜமானரே உம்மை
வாழ்வளித்த எஜமானரே உம்மை
Lyrics
வாழ்வளித்த எஜமானரே-உம்மை
வாயார வாழ்த்திப் பாடிடுவேன்
என் வாழ்வெல்லாம் வாழ்த்திப்பாடுவேன்
வாடிப்போன மலராய் கிடந்தேன்
என்னை வாசம் வீசச் செய்தீரையா
வழியும் நீரே ஒளியும் நீரே
என்னை வாழவைக்கும் தெய்வமும் நீரே
2.மறுதலித்த பாவி எனக்கும்
மறுவாழ்வு தந்தீரையா
அன்பு நிறைந்த தெய்வம் நீரே-என்னை
ஆதரிக்கும் தெய்வமும் நீரே
3. புயல் காற்றை ஓயச்செய்தே-வாழ்வில்
தென்றல் வீசச் செய்தீரையா
வாழ்க்கைப் படகில் துணையாய் வந்தீர்
வாழ்வில் எந்நாளும் மகிழச் செய்தீர்
Details
- Numeric ID
- 6684
- Song ID
- vazhvalikum-ejamaanane-ummai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open